Wednesday, February 18, 2009

Meet the Robinsons


Just Keep Going - இதுதான் படத்தின் tagline. அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி அருமையாக நியாயப்படுத்துகின்றனர் இந்த Robinsons.

தனக்கென யாருமே இல்லை என பெருந்துயரில், அனாதை இல்லத்தில் வளரும் சிறுவன்தான் நம் நாயகன். ஆனா படிப்பில் படு சுட்டி. ஒரு நாள் அறிவியல் கண்காட்சிக்காக தான் செய்யும் ஒரு சின்ன கண்டுபிடிப்பு இந்த உலகின் எதிர்காலத்தையே மாற்றியெழுதப் போகிறது என்று தெரியாமல் செல்கிறான். ஆனால், அந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்திலிருந்து வந்த வில்லனால் திருடிச் செல்லப்பட, திரும்பவும் உலகின் தலையெழுத்து எப்படி மாறுகிறது. அதனை நம் நாயகன் எப்படி எதிர்காலத்திற்கே சென்று சமாளிக்கிறான் என்பதுதான் கதை. சுவாரஸ்யமான மற்றொரு விஷயம், எதிர்காலத்தில் தன் சொந்த குடும்பத்தையே சந்திக்கிறான் நாயகன்.

அனிமேஷன் படங்களுக்கே உரித்தான கலர்புல் தன்மையுடன் கொஞ்சம் அதிகமாகவே science fiction கலந்து கலக்கலாகத் தந்திருக்கிறார்கள்.

Schindler's List


----------------------------
வருடம் : 1993
இயக்கம் : Steven Spielberg
நடிப்பு : Liam Neeson, Ben Kingsley
மொழி : ஆங்கிலம்
----------------------------

Steven Spielberg எனும் மகா கலைஞனின் பெயர் எத்தனையோ படங்களுக்காக பேசப்பட்டடிருந்தாலும், அவருக்கு முதன் முதலில் ஆஸ்கார் விருது பெற்றுத்தந்தது இந்த Schindler's List.


Oscar Schindler எனும் ஒரு சாதாரண வியாபாரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த புத்தகம் Schindler's Ark. அதன் திரை வடிவமே Schindler's list. கதையின் பின்புலம், இரண்டாம் உலகப்போரில் நடந்த யூதப் படுகொலைகள்.

Schindler ஒரு சந்தர்ப்பவாத வியாபாரி. அது வரை தோல்வியே சந்தித்து வந்த அவன், இரண்டாம் உலகப்போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முனைகிறான். ராணுவத்துக்குத் தேவையான தளவாடப்பொருட்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை தொடங்குகிறான். தொழிற்சாலையில் வேலை செய்ய 'Concentration Camp' களுக்கு கடத்தப்படும் யூத மக்களை அழைத்துக் கொள்கிறான். அப்போதைய ஜெர்மன் சட்டப்படி யூதர்களுக்கு சம்பளம் தரத்தேவையில்லை. இவ்வாறு தன் பொருளாதார ஆதாயாத்துக்காக செய்யப்படும் Schindler's ஒரு சிறு செய்கை அவனை ஒரு தேவனாகவும் அவன் தொழிற்சாலையை ஒரு சொர்கமாகவும் மாற்றுகின்றது.. எப்படி?

அதுதான் Schindler's List ::வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஒரு ஒற்றைக் காகிதமாய் அசைகிறது...


Genocide ல் மடியவிருந்து 1600 யூதர்களை தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றுகிறார் Schindler. திரைப்படத்தில் வருவதனால், ஹீரோ மாதிரி Actionல் இல்லை.. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் வியாபாரம்தான்.. எல்லாமே வியாபாரம்தான்.. Schindler ரால் காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை போரின் முடிவில் போலந்தில் மொத்தமாக எஞ்சியிருந்த யூதர்களின் எண்ணிக்கையை விட அதிகம். அன்று காப்பாற்றப்பட்டவர்களின் சந்ததியினர் இன்று, Oscar Schindler ன் கல்லறையில் அஞ்சலி செலுத்த, இரண்டாம் உலகப்போரில் மடிந்த 1.6 மில்லியன் யூதர்களுக்கு சமர்ப்பணம், என்ற வரிகளோடு மெல்லிசை படர படம் முடிவடைகிறது.. ஆனால் இப்படம் ஏற்படுத்தும் தாக்கம் நீண்ட நேரத்திற்கு நம் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது..


இது சத்தியமாக Spielberg படம் என்று சொல்லவே முடியாது. Speilberg ன் அக்மார்க் முத்திரையான பர பர திரைக்கதை சுத்தமாக இல்லை. மிக மெதுவாக, மிக மிக மெதுவாக வாழ்க்கையின் போக்கிலேயே பயணிக்கிறது இத்திரைப்படம். இப்படத்தின் மிகப்பெரும் சாதனையே, எதையும் மிகைப்படுத்தாமல், அப்படியே பதிவு செய்ய முயற்சித்திருப்பதுதான். நிச்சயமாக அடுத்து வரும் பல தலைமுறைக்கு இரண்டாம் உலகப்போரைப் பற்றிய ஆவணம் இத்திரைப்படம்.


Schindler ஆக வரும் Liam Neeson-ஐ விட Ben Kingsley-யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனை உணர்ச்சிகள் அந்த முகத்தில். ஆரம்பத்தில் தன் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்ட Schindler மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியாகட்டும், பின்னாளில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி ராணுவமுகாமில் சந்திக்கும் காட்சியாகட்டும், இறுதியில் தன்சொத்து முழுவதும் இழந்து Schindler பிரிந்துசெல்லும் போது அவனுக்குக் கொடுக்க எதுவுமே இல்லாமல், தன் தங்கப் பல்லை பிடுங்கி அதில் ஒரு மோதிரம் செய்து பரிசளிக்கும் காட்சியாகட்டும் அனைத்திலும் வாழ்ந்திருக்கிறார் Kingsley.. அந்த மோதிரத்தில் எழுதியிருக்கும் ஹீப்ரு வாசகம்.. " ஒரு உயிரை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுபவன் இந்த உலகத்தைக் காப்பாற்றுகிறான்" . இதனை நீங்கள் ஆமோதித்தால், நிச்சயமாக இப்படத்தைப் பார்க்கவும்.

Tuesday, February 17, 2009

My Sassy Girl


---------------------------
இயக்கம் : Kwak Jae-yong
நடிப்பு: Jun Ji-hyun, Cha Tae-hyun
மொழி : கொரியன்,
ஆண்டு : 2001
---------------------------
ஒரு பயந்தாங்கொள்ளி நாயகனுக்கும், அடிதடி நாயகிக்கும் இடையிலான காதல் கலாட்டாதான் My Sassy girl.

படத்தின் கதை, நாயகியின் ஒற்றை வசனத்தில் அடங்கியிருக்கிறது... " I met the man from the future". ஒரு மாதிரி sci-fi மாதிரி தெரியுதா..? ஆனா, அது இல்லை.


தன் முதல் காதலனின் மறைவுக்குப் பிறகு ஒரு எக்கச்சக்கமாக தண்ணியடிச்சுட்டு(!) தற்கொலைக்கு முயலும் நிலையில் இருக்கும் நாயகியைக் காப்பாற்றுகிறார் நாயகன். அதன் பின் மீண்டும் மீண்டும் அவர்கள் சந்திக்கும் தருணங்கள் தானாய் வந்து வாய்க்க நாயகனுக்குள் காதல் பூக்கிறது. அதன் பின் திரைக்கதையின் போக்கில் நகர்கிறது இப்படம்.


மொத்தத்தில் மூன்று பாகங்களாக வருகிறது இப்படம். முதல் பாகம், இருவரும் சந்தித்ப்பதில் தொடங்கி காதல் பூப்பது வரை. இரண்டாம் பாகம், Time capsuleஐ புதைத்து இருவரும் பிரிவது வரையில், மூன்றாம் பாகம், மீண்டும் இருவரும் இணைய சுபம். :-)
Time Capsule - அதாவது, இருவரும் பிரியறதுன்னு முடிவுசெய்த பிறகு, கடைசியாக ஒரு முறை சந்திக்கத் திட்டமிடுகின்றனர். அதற்கு முந்தைய நாள் இரவு ஒருவரைப் பற்றி மற்றொருவர் என்னென்னவெல்லாம் நினைக்கிறாரோ அதனை ஒரு கடிதத்தில் எழுதி எடுத்து வரவேண்டும். அடுத்த நாள் இருவரும் சேர்ந்து ஒரு முட்டை வடிவிலான பெட்டியில் இருகடிதங்களையும் வைத்து, ஒரு சிறு குன்றின் உச்சியிலுள்ள ஒரு மரத்தினடியில் புதைக்கின்றனர். சரியாக, இரண்டு வருடம் கழித்து அதே நாளில் இருவரும் அவ்விடத்திற்கு திரும்பி வந்து இருவரது கடிதத்தையும் படிப்பதாக ஒரு முடிவு.
இரண்டு வருடங்களுக்குப் பிறது இருவரும் அந்த இடத்துக்கு வந்தாங்களா? எப்படி சேர்ந்தார்கள் என்று சொல்கிறது படத்தின் பிற்பகுதி..

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அந்த ஹீரோயின்தான்.. முன்னாடி நமக்கு forward ல் வரும் சில படங்கள் ஞாபகம் இருக்கா? Japanese painting மாதிரி இருக்கும். ஒரு பெண் புத்தகம் படிப்பது மாதிரி அப்பும் இன்னும் சில.. கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு ஹீரோயின்.. எனக்கு ஆறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியல.. :-)



அடுத்து அந்த இரண்டாம் பாகத்தின் முடிவுக் காட்சி.. அப்பப்போ நாயகிக்கு திடீர்னு ஒரு ஆசை வரும் அதனை நாயகன் நிறைவேற்றியே ஆக வேண்டும்.. படத்தின் முற்பகுதிகளில் இது மாதிரி ஆசைகளை நிறைவேற்றுகையில் நமக்கு சிரிப்பு வந்தாலும், கடைசி காட்சியில் ரொம்பவே feel பண்ண வைச்சிடுது..
ஒரு மாதிரி feel good movie.. படத்தில் வரும் பழக்கவழக்கங்கள், சமூக அமைப்பெல்லாம் ரொம்ப புதுசா இருந்தது எனக்கு..


இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் ஹாலிவுட்டில் தற்போது தயாரிக்கப்படுகிறது. இவ்வாண்டின் இறுதியில் திரையில் எதிர்பார்க்கலாம். (இப்போது வெளிவந்து விட்டது. யாராவது பாத்திருந்தா எப்படி இருக்குனு சொல்லுங்க)

---
டிஸ்கி: கடந்த ஒரு வருட காலமாக இந்த பக்கமே வரவில்லை. நேரம் கிடைக்கவில்லை என்பதை விட, ஆர்வம் குறைந்துவிட்டது என்றே சொல்லுவேன்.. இனிமேலாவது அவ்வப்போது பதிவிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். எனது multiply பக்கத்தில் நான் எழுதிய சில படக்குறிப்புகளையும் இங்கே பதிவிடப்போகிறேன். இந்த இடைப்பட்ட கால இடைவெளியினால், சில காலப்பிழைகள் இருக்கலாம்.

Wednesday, January 23, 2008

பீமா


------------------------------------
இயக்கம் : லிங்குசாமி
நடிப்பு : விக்ரம், பிரகாஷ்ராஜ்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வருடம் : 2008
------------------------------------

கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் எனும் பழமொழியை எக்கச்சக்க ரத்தத்தோடும் சத்தத்தோடும் சொல்லும் படம்தான் பீமா.


படம் ஆரம்பிச்சதிலிருந்து முடியற வரை படபட படபடன்னு ஆளாளுக்கு சுட்டுகிட்டே இருக்காங்க. சும்மா பீச்ல போய் சுண்டல் வாங்கற மாதிரி, போய் ஒருத்தர சுட்டுட்டு ஆளாளுக்கு திரும்பிபோறாங்க. இளம் வயதில் ராமேஸ்வரத்தில் வாழும் குட்டி விக்ரம் அப்பகுதியில் இருக்கும் ரெளடியான பிராகாஷ்ராஜால்( of course.. நல்லது செய்யற ரெளடிதான்) கவரப்பட்டு தானும் பிற்காலத்தில் ரெளடியாகனும்னு முடிவுபண்றார்.. பிற்காலத்தில் அப்படியே சேர்ந்திடவும் செய்யறார்.. அதுக்கப்புறம் என்ன.. ரகளைதான்.. சும்மா சுத்தி சுத்தி சண்டை போடறார்.. கிளைமாக்சுக்காக போலீசும் வருது.. எல்லாருமா சேந்து செத்துப்போறாங்க.. கடைசியில் ஒரு பன்ச் வேறு.. "ஆயுதத்துக்கு நல்லவன் கெட்டவனெல்லாம் தெரியாது. உபயோகிக்கப் படுபவன் மீது அது தன் குணத்தைக் காட்டும்.. அவ்வளவே.. " எப்படி இருக்கு? இதுதாங்க பீமா..


ஆனாலும் விக்ரம் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.. தனக்குக் கொடுக்கப் பட்ட கதாபாத்திரமாக மாற ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். முதல்காட்சியிலேயே அவரின் உழைப்பு தெரிகிறது.. ஆனால் இந்த படத்திற்கு இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்.. பாட்டுக்கு மட்டும் வந்து போறாங்க திரிஷா. (ஒரு பாட்டைத்தவிர மத்த எல்லா பாட்டுமே டூயட்தான்) . சண்டைக்காட்சிகள் உண்மையிலேயே ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. குறிப்பாக சண்டைக்காட்சிகளின் ஒளிப்பதிவு அருமை.. ஒரு மாதிரி ஹாலிவுட்தனமா தெரிஞ்சுது.. (Thanks to RD Rajasekar).


எல்லாம் சரி.. எங்கே போய்கிட்டு இருக்கு தமிழ் சினிமா? கதாநாயகன் தன்னெதிரில் வரும் பத்து பதினைந்து பேரை குருவி சுடுகிற மாதிரி சுட்டுகிட்டே முன்னேறுவதை, தியேட்டரில் என்அருகிலிருந்த ஒரு சிறுவன் பாப்கார்ன் கொறித்துக்கொண்டே ரசிக்கிறான். அந்த பிஞ்சு மனதில் பதிவது என்ன..? போன மாசம் செய்தித்தாளில் படித்த ஒரு செய்திதான் நினைவுக்கு வந்தது. மத்தியபிரதேசத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன், ஒரு சின்ன ஜியாமண்டரி பாக்ஸ் தகறாரில் சக மாணவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டதில் அந்த மாணவன் மரணமடைந்திருக்கிறான்.. இனிமேலாவது யோசிக்க வேண்டாமா..?

Wednesday, January 16, 2008

Night at the Museum


------------------------------------
இயக்கம் : Shawn Levy
நடிப்பு : Ben Stiller, Robin Williams
மொழி : ஆங்கிலம்
வருடம் : 2006
------------------------------------
1993 ம் ஆண்டு Milan Tranc எழுதிய குழந்தைகளுக்கான புத்தகம்தான் Night At the Museum. அதனைத் தழுவி எடுக்கப்பட்டதே இத்திரைப்படம். பெயரே கதை சொல்கிறது. ஊரே உறங்கும் இரவில் அருங்காட்சியகத்தினுள் நிகழும் அதிசயங்கள்தான் கதை.

நம்ம ஹீரோ அந்த அருங்காட்சியகத்தில் night watchman ஆக வேலைக்குச் சேருகிறார். வேலையின் முதல் நாள். இரவில் கண்விழித்துப் பழக்கப்டாத ஹீரோ உறங்கிவிடுகிறார். நள்ளிரவில் கண்விழித்துப் பார்க்கும் போது, அருங்காட்சியகத்தில் இருந்த டைனோசர் எலும்புக் கூட்டை அதன் இடத்தில் காணவில்லை. பதற்றத்துடன், அருங்காட்சியகத்தின் உள்ளே செல்கிறார். அங்குதான் காத்திருக்கிறது அதிர்ச்சி. Ben Stiller தேடிச்செல்லும் அந்த டைனோசர் எலும்புக்கூடு ஒரு water tape ல் நீர் அருந்திக் கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்து ஹீரோ அலற, ஹீரோவை டைனோசர் துரத்த, அப்போதுதான் ஒரு உண்மைதெரியவருகிறது. அது.. அந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் அனைத்தும் இரவு நேரத்தில் உயிர்பெற்று உலவுகின்றன.டைனோசர் மட்டுமல்ல. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், சிங்கம்,புலி, சிம்பன்சி குரங்கு,வரிக்குதிரை, ஆப்ரிக்க யானை, கற்கால மனிதற்கள், Cow boys, ரோமப் பேரரசர் ஆக்டேவியஸ் என ஒரு சர்ரியலிஸக் கலைவையே உயிர் பெறுகிறது. ஆனால் அனைவரும் பகலவனின் உதயத்தில் சிலையாய்உறைகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அங்கிருக்கும் ஒரு எகிப்திய மம்மியும் அதன் Tablets எனப்படும் ஒரு மந்திரப்பலகையும்தான்.

ஒரு சுவாரஸ்யமான கதைக்கு இந்த கதைக்களம் போதாதா..? இடையில் ஒரு வில்லன் Group. அருங்காட்சியகத்தைத் திருட எத்தனிக்கிறது. அதனை Ben Stiller அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருள்கள்(!) அனைவரின் உதவியோடு எப்படி முறியடிக்கிறார் என்பதை கிராபிக்ஸ் கலக்கலோடுவயிறு குலுங்கச் சொல்லும் கதைதான் Night At the Museum.

படத்தில் அத்தனை ஜனரஞ்சக விஷயங்களுக்கும் உத்தரவாதம் உண்டு. காதல், சோகம், வீரம், விபரீதம், நகைச்சுவை, ஏமாற்றம் என அத்தனையும் உண்டு. Robin Williams வழக்கம் போல் ரூஸ்வெல்ட்டாக பின்னியெடுத்திருக்கிறார்.
குடும்பத்துடன் கண்டுகளிக்க சிறந்த படம்.

உபதகவல்: (இப்படத்தைக் காண விரும்புபவர்களுக்கு)வருகிற 26ம் தேதியன்று (26th Jan 2008) Star Movies பாருங்க.

Friday, January 4, 2008

கல்லூரி

------------------------------------------------
இயக்கம் : பாலாஜி சக்திவேல்
தயாரிப்பு: ஷங்கர்
நடிப்பு : புதுமுகங்கள்
இசை : ஜோஸ்வா sriதர்
------------------------------------------------
பல கனவுகள் தரும் கல்லூரியில் கருகிய சில மலர்களின் கதை இந்த கல்லூரி. நாம் பெரும்பாலும் பார்த்துப் பழகாத கல்லூரியை கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர். இயல்பான கதாபாத்திரங்கள்.. நாயகன் நாயகியைத் தாண்டி விரிகின்றனர். குறிப்பாக கயல்விழி கதாபாத்திரம். முன்பாதியில் வரும் அரட்டை அரங்கம் தேவையில்லாத திணிப்பு. இசை நன்று, சில இடங்களில் காதல் சாயல். முத்துக்குமார் பளிச்சிடுகிறார். எல்லாம் சரி.. Climax தான்.. கொஞ்சம் ஒட்டாமல் நிற்கிறது.. திடுதிப்னு ஒரு Climax..அது ஏற்படுத்த வேண்டிய தாக்கம் ஏற்படாமல் ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது.

Thursday, December 27, 2007

The little Mermaid


----------------------------------------
இயக்கம் : Ron Clements,John Musker
இசை : Alan Menken
தயாரிப்பு : Walt Disney
வருடம் : 1989
----------------------------------------


ஒரு முறை கடலுக்கு மீன்பிடிக்க வரும் இளவரசன் எரிக் கடலில் தவறி விழுந்துவிட அவனைக் காப்பாற்றுகிறாள் கடற்கன்னியான ஏரியல், கடல் தேசத்தின் இளவரசி. வேறு என்ன.?ஏரியலுக்கு எரிக் மீது காதல் வருகிறது. ஒரு கடற்கன்னியால் ஒரு மனிதனை எப்படி மணக்க முடியும்? இவள் எண்ணத்தை அறிந்து, கடல் ராஜ்ஜியத்தை அடையத்துடிக்கும் சூனியக்காரி ஒருத்தி, ஏரியலை மனிதப் பெண்ணாக மாற்றுவதாக வஞ்சித்து கடல் ராஜ்ஜியத்தை கைப்பற்றுகிறாள். இவை அனைத்தையும் கடந்து காதல் எப்படி கைகூடுகிறது என்பதை கலர்புல்லாகச் சொல்லும் படம்தான் The Little Mermaid. அனிமேஷன் படங்களுக்கே உரித்தான குண்டு கண்களுடன் விழித்து விழித்து பாரக்கும் நாயகி, நாயகியுடன் ஒரு தோழி, ஆஜானுபாகுவான ஹீரோ, மந்திர தந்திரங்கள் தெரிந்த வில்லன், அங்கங்கே high pitch ல் பாடல்கள், comedy செய்யும் சிறு விலங்குகள் என அனைத்தும் இருந்தும் Something missing. திரைக்கதையிலும், Creativity லும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஆனாலும் இப்படம் ஒரு Box office hit. ஏறக்குறைய 100 மில்லியன் டாலர் என வசூலில் சாதனை படைத்தது.