Wednesday, January 23, 2008

பீமா


------------------------------------
இயக்கம் : லிங்குசாமி
நடிப்பு : விக்ரம், பிரகாஷ்ராஜ்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வருடம் : 2008
------------------------------------

கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் எனும் பழமொழியை எக்கச்சக்க ரத்தத்தோடும் சத்தத்தோடும் சொல்லும் படம்தான் பீமா.


படம் ஆரம்பிச்சதிலிருந்து முடியற வரை படபட படபடன்னு ஆளாளுக்கு சுட்டுகிட்டே இருக்காங்க. சும்மா பீச்ல போய் சுண்டல் வாங்கற மாதிரி, போய் ஒருத்தர சுட்டுட்டு ஆளாளுக்கு திரும்பிபோறாங்க. இளம் வயதில் ராமேஸ்வரத்தில் வாழும் குட்டி விக்ரம் அப்பகுதியில் இருக்கும் ரெளடியான பிராகாஷ்ராஜால்( of course.. நல்லது செய்யற ரெளடிதான்) கவரப்பட்டு தானும் பிற்காலத்தில் ரெளடியாகனும்னு முடிவுபண்றார்.. பிற்காலத்தில் அப்படியே சேர்ந்திடவும் செய்யறார்.. அதுக்கப்புறம் என்ன.. ரகளைதான்.. சும்மா சுத்தி சுத்தி சண்டை போடறார்.. கிளைமாக்சுக்காக போலீசும் வருது.. எல்லாருமா சேந்து செத்துப்போறாங்க.. கடைசியில் ஒரு பன்ச் வேறு.. "ஆயுதத்துக்கு நல்லவன் கெட்டவனெல்லாம் தெரியாது. உபயோகிக்கப் படுபவன் மீது அது தன் குணத்தைக் காட்டும்.. அவ்வளவே.. " எப்படி இருக்கு? இதுதாங்க பீமா..


ஆனாலும் விக்ரம் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.. தனக்குக் கொடுக்கப் பட்ட கதாபாத்திரமாக மாற ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். முதல்காட்சியிலேயே அவரின் உழைப்பு தெரிகிறது.. ஆனால் இந்த படத்திற்கு இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்.. பாட்டுக்கு மட்டும் வந்து போறாங்க திரிஷா. (ஒரு பாட்டைத்தவிர மத்த எல்லா பாட்டுமே டூயட்தான்) . சண்டைக்காட்சிகள் உண்மையிலேயே ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. குறிப்பாக சண்டைக்காட்சிகளின் ஒளிப்பதிவு அருமை.. ஒரு மாதிரி ஹாலிவுட்தனமா தெரிஞ்சுது.. (Thanks to RD Rajasekar).


எல்லாம் சரி.. எங்கே போய்கிட்டு இருக்கு தமிழ் சினிமா? கதாநாயகன் தன்னெதிரில் வரும் பத்து பதினைந்து பேரை குருவி சுடுகிற மாதிரி சுட்டுகிட்டே முன்னேறுவதை, தியேட்டரில் என்அருகிலிருந்த ஒரு சிறுவன் பாப்கார்ன் கொறித்துக்கொண்டே ரசிக்கிறான். அந்த பிஞ்சு மனதில் பதிவது என்ன..? போன மாசம் செய்தித்தாளில் படித்த ஒரு செய்திதான் நினைவுக்கு வந்தது. மத்தியபிரதேசத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன், ஒரு சின்ன ஜியாமண்டரி பாக்ஸ் தகறாரில் சக மாணவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டதில் அந்த மாணவன் மரணமடைந்திருக்கிறான்.. இனிமேலாவது யோசிக்க வேண்டாமா..?

2 comments:

மாதங்கி said...

நல்ல கேள்வியைத்தான் கேட்டிருக்கிறீர்கள்.

http://clickmathangi.blogspot.com/2008/04/blog-post_09.html

முரளிகண்ணன் said...

\\எல்லாம் சரி.. எங்கே போய்கிட்டு இருக்கு தமிழ் சினிமா? கதாநாயகன் தன்னெதிரில் வரும் பத்து பதினைந்து பேரை குருவி சுடுகிற மாதிரி சுட்டுகிட்டே முன்னேறுவதை, தியேட்டரில் என்அருகிலிருந்த ஒரு சிறுவன் பாப்கார்ன் கொறித்துக்கொண்டே ரசிக்கிறான். அந்த பிஞ்சு மனதில் பதிவது என்ன..? \\
சரியான கேள்வி